Iniya Nandavanam Events

குழந்தைகளைக் கொண்டாடுவோம் விருது விழா

  • Chandrasekar
  • 14/02/2021
  • ​விருது விழா

தமிழ்நாட்டில் திருச்சியில் இயங்கிவரும் நந்தவனம் பவுண்டேசன் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், திருச்சி வாசவி கிளப் எலைட் கப்புல்ஸ் இணைந்து நடத்திய குழந்தைகளைக் கொண்டாடுவோம் சிறார் இலக்கிய விருது மற்றும் சாதனை மாணவர் விருது வழங்கும் விழா 20 - 11 - 2022 அன்று திருச்சியியில் சிறப்பாக நடைபெற்றது இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் ப.நரசிம்மன் தலைமையில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பால சாகித்திய புரஸ்கர் விருதாளர் மு.முருகேஷ் மலேசியா செந்நூல் முத்தமிழ்ப்படிப்பகத் தலைவர் பெ.இராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினர் நிகழ்வில் மு.முருகேஷ் தனது சிறப்புரையில் 'நவீன கருவிகளின் வரவால் தற்போது குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே அரிதாக உள்ளது. பெற்றோர் குழந்தைகளின் பேச்சைக்காது கொடுத்து கேட்க வேண்டும். குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அப்போதுதான் குழந்தை உணர்வு நமக்கும் ஏற்படும். அதனால் பெரிய பிரச்சனைகளும் சாதாரணமாத் தெரியும். படிப்பு மட்டுமே வளர்ச்சிக்கான அறிகுறியல்ல. அதையும் தாண்டி உலகில் பல்வேறு விஷயங்கள் உள்ளன.அவற்றைத் தெரிந்துகொள்ள குழந்தை உள்ளம் வேண்டும் என்றார் தொடர்ந்து விழாவில் புதுச்சேரி பாரதி வாணர் சிவா,சிங்கப்பூர் டி.என். இமாஜான், ஆமீரகம் துரை ஆனந்த்குமார், ஈரோடு உமையவன்,வந்தவாசி ஜு..மைத்ரேயி, சேலம் சே.மதுரம் ராஜ்குமார், திருச்சி தீப் ஷிகா, ஆசியோருக்கு சிறார் இலக்கிய விருதுகளும், மலேசியா யோகன் சுகுமாறன், திருச்சி, ஸ்ருதிகா தீப்தி,சஞ்சீவ் ஜெயப்பிரகாஷ், ரமாதேவி, ஜெயுதீஷ், தன்யா சக்தி, ஹர்சினி, தர்ஷினி ஆகியோருக்கு சாதனை மாணவர் விருதுகளும் வழங்கப்பட்டது முன்னதாக உரத்தசிந்தனை திருச்சிக்கிளைத்தலைவர் பா.சேதுமாதவன் அனைவரையும் வரவேற்க நந்தவனம் பவுண்டேசன் பொருளாளர் பா.தென்றல் நிகழ்வை தொகுத்து வழங்க மருத்துவக்கலாநிதி வே.த.யோகநாதன் நன்றி கூறினார்

சுவிட்சர்லாந்தில் இனிய நந்தவனம் பதிப்பக நூல் வெளியீடு

  • Chandrasekar
  • 12/11/2022
  • ​விருது விழா

சுவிற்சர்லாந்து சூரிச்சில் 12/112022 நடந்த புத்தக கண்காட்சியில் எழுத்தாளர் கமலினி கதிரின் சந்தோஷ ராகங்கள் என்ற குழந்தைகளை எவ்வாறு பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும் என்பது பற்றிக் கூறும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.சூரிச்சில் ஆயுர்வேத வைத்தியரும் எழுத்தாசிரியரின் நண்பியுமான திருமதி சஷிமீரா சிவராசலிங்கம் வெளியிட்டு வைத்தார். எழுத்தாசிரியரின் நண்பர்கள்,ஊடகவியலாளர் திரு.சண் தவராஜா,திரு.பௌசிர்,திரு.அமரதாஸ்,திரு.பொலிகை ஜெயா,திருமதி.தவனேஸ்வரி சிவகுமார்,திருமதி.சிவாஜினி தர்மபாலா இன்னும் பலர் கலந்துகொண்டனர்.நூலைப்பற்றி நயப்புரை செய்த பொலிகை ஜெயா இந்நூல் நூலசிரியரின் கணவர்.பிள்ளைகள்,மருமகன்,பேரப்பிள்ளைகளுக்கு சமர்ப்பணம் செய்ததைக் குறிப்பிட்டு அதன் இதுவரை கேள்விப்படாத சமர்ப்பணம் என்று சிலாகித்துக் கூறியிருந்தார்.அக்டமி ஒவ் ஆர்ட் ஶ்ரீமதி.வாணி.சர்மாவின் மாணவிகளான தர்ணிகா இராஜரட்ணம்,பிரணகி வர்ணகுமாரன்,கேதாரணி இரட்ணகுமார் நடன நிகழ்ச்சிகளும் இந்த வெளியீட்டு விழாவில் நடைபெற்றன.ஶ்ரீமதி.வாணி.சர்மா நூலசிரியர் கமலினிகதி்ருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தார்.இந்நூல் திருச்சி இனிய நந்தவனம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது

ஞானம் சஞ்சிகை ஆசியருக்கு திருச்சியில் இதழியல் மாமணி விருது வழங்கப்பட்டதுு

  • Chandrasekar
  • 3/12/2022
  • ​சிறந்த நூல் பரிசு

இனிய நந்தவனம் வாசகர் வட்டம் ஏற்பாட்டில் இலங்கை எழுத்தாளரும் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான தி.ஞானசேகரன் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது நிகழ்வுக்கு எழுதமிழ் இயக்கத் தலைவர் மு.குமரசாமி தலைமை தாங்கினார் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் (பொறுப்பு) பெ. உதயகுமார் முன்னிலை வகித்தார் தமிழக மேனாள் அமைச்சர் என். நல்லுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இவர் பேசு போது இலங்கையில் பல நெருக்கடிகள் இருக்கிறது என்றாலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூழல் மாறிவருகிறது இந்தச் சூழலைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் இன பாடு இல்லாமல் புத்தர் சொன்னஅன்பு அங்கே எல்லோர் இடத்திலும் பரவேண்டும் இலங்கை மக்கள் நிறைய இழப்புகளை சந்தித்துள்ளார் அவர்களுக்கு ஒரு மறுமலர்ச்சி உண்டாக்கவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் இன்று உலகம் எல்லாம் பரவி உள்ளனர் அவர்களால்தான் தமிழ் உலகம் முழுவதும் பேசப்படுகிறது என்று சிறப்புரையில் குறிப்பிட்டர் மகாகவி இதழின் ஆசிரியர் வதிலை பிரபா தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது இக்கலந்துரையாடலில் கவிஞர் வீ.கோவிந்தசாமி, மழபாடி இராஜாராம், கப்பல் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி, நொச்சியம் ச.சண்முகம் புலவர் தியாகசாந்தன், வி.ஜிபி. நிறுவன திருச்சிக் கிளைத்தலைவர் இரா. தங்கையா, வழக்கறிஞர், வி.ரெங்கராஜ், முனைவர். சலேத், கவிஞர் நந்தகுமார் கவிஞர் மா.திருவள்ளுவர் வ.மணிமாறன், திருச்சி வாசவி கிளப் எலைட் கப்புள்ஸ் தலைவர், P தனபால், கலாநிதி வே.த.யோகநாதன், டாக்டர் பி.கலைமணி, புலவர்.நாச்சிமுத்து.கவிஞர் ஜனனி அந்தோணிராஜ் சுற்றுலா வழிகாட்டி சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறந்த கேள்விகலை முன்வைத்தனர் முன்னதாக கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன் அனைவரையும் வரவேற்க இனிய நந்தவனம் இணையாசிரியர் பா.தென்றல் விழாநாயகர் ஞானசேகரன் பற்றி அறிமுக உரையாற்றினார் நிறைவாக கவிஞர் வீ.கோவிந்தசாமி அனைவருக்கும் நன்றி கூறினார் நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தார் விழாவில் ஞானசேகரன் அவர்களின் 22 ஆண்டுகால இதழியல் பணிபைப் பாராட்டி இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் இதழியல் மாமணி என்ற விருது வழங்கப்பட்டது

நந்தவனம் பவுண்டேசன் வழங்கிய ஆளுமைப் பெண் விருது விழா

  • Chandrasekar
  • 14/02/2021
  • ​விருது விழா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறு நந்தவனம் பவுண்டேசன் பல் துறைகளில் சாதித்து வரும பெண்ணனகளை கெளரவித்து விருது வழங்கி வருகிறது 2021 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா 14 / 02/2021 அன்று திருச்சியில் பிரமாண்டமாக நடைபெற்றது நந்தவனம் பவுண்சேன் . விழித்தெழு பெண்ணே, கனடா சக்தி யோகாலையா பிரவெட் லிமிடெட், அமெரிக்கா , இணைந்து நடத்திய இவ்விழாக்கு நந்தவனம் பவுண்டேசன், தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் தலையேற்க செயலர் எம் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார் .கும்பகோணம் தமிழ் பால் நிறுவன இயக்குநர் தியாகராஜன் கண்ணன், அமெரிக்கா சக்தி யோகாலையா பிரவேட் லிமிடெட் இயக்குநர் கவிதா இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆளுமைப் பெண் விருதுகள் வழங்கி சிறப்பித்தனர் கவிஞர் கவி செல்வா திருச்சி , டாக்டர் ஆபிதா பர்வீன் திருநெல்வேலி , டாக்டர் சீலா தேவி பெங்களுர் , எஸ்.வித்யா கரூர் , வெண்ணிலா (எ) லதா கோவை ,து .மார்த்தா காரைக்குடி , டாக்டர் D .தாமரை பள்ளத்தூர் ,செ.திலகவதி கரூர் , சங்கீதா ராமசாமி கள்ளக்குறிச்சி , நித்யா ரங்கராஜன் சென்னை ,புஷ்பலதா திருச்சி , நதியா திருச்சி , மணிமேகலை ஈரோடு , டாக்டர் D. இராஜகுமாரி சேலம் ஆசியோருக்கு ஆளுமைப் பெண் விருது வழங்கப்பட்டது முன்னதாக நந்தவனம் பவுன்சேன் பொருளாலர் பா.தென்றல் அனைவரையும் வரவேற்க கவிஞர் மணிகண்டன் நிகழ்வை சிறப்பாக தொகுத்து வழங்கினார் நிறைவாக வைத்திய கலாநிதி வேதா யோகநாதன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

மனுஷி சிறுகதை நூலுக்கு சிறந்த நூல் பரிசு

  • Chandrasekar
  • 30/01/2021
  • ​சிறந்த நூல் பரிசு

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடான சுவிட்சர்லாந்து எழுத்தாளர் சண் தவராஜா எழுதிய மனுஷி சிறுகதை நூலுக்கு கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய சிறந்த நூல்களுக்கான பரிசுப் போட்டியில் இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது இன்று (30/01/2021,கம்பத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சண் தவராஜா சார்பில் பரிசையும் சான்றிதலையும் நான் பெற்றுச் கொண்டேன் கொரோனா காரனமாக சண் தவராஜா நேரில் வர முடியாததால் வாழ்த்துகளை மட்டும் தெரிவித்துக் கொண்டார்

இருப்பதில் பகிர்வோம் -3

  • Chandrasekar
  • 30/01/2021
  • ​பகிர்வோம்

கனடா சமூக சேவகர் Dr நரேந்திரா விவேகானந்தா அவர்கள் தனது வருமானத்தில் சிறு பகுதியை தமிழ் நாட்டில் நந்தவனம் பவுண்டேசன் மூலம் இருப்பதில் பகிர்வோம் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி இரண்டு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வருந்தார் அந்த வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் வசிக்கும் பொம் முத்தாயி குடும்பத்திற்கு பொருளாதார மேம்பாட்டுக்காக தையல் எந்திரம் வழங்கப்பட்டது இவரது மகன் வினோ மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் வருமானம் ஈட்ட வழியின்மையால் இந்த உதவி வழங்கப்பட்டது. இதே ஊரைச் சேர்ந்த கன்னிகேஸ்வரி கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் சிரமப்படுவதால் ஓரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது நந்தவனம் பவுண்டேசன் நிறுவனர் நந்தவனம் சந்திரசேகரன் இருவர் குடும்பத்தையும் நேரில் பார்வையிட்டு உதவிகளை வழங்கினார்

திருவள்ளுவர் தின விழா

  • Chandrasekar
  • 23/01/2021
  • திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுர் சிலைக்கு மாலை அணிவித்து திருவள்ருவர் தினம் ( 15 / 01/2021 ) கொண்டாடப்பட்டது திருச்சிராப்பள்ளி எழுதமிழ் இயக்கம் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு எழு தமிழ் இயக்கத் தலைவர் தணிக்கையாளர் மு.குமரசாமி தலைமையேற்க முனைவர் ச.சாமிமுத்து முன்னிலை வகித்தார் திருச்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவஹர், என்.நிசவீரப்பன் ,நொச்சியம் சண்முகநாதன் , நந்தவனம்சந்திரசேகரன் ,வே.சந்தானகிருஷ்ணன் , கவிஞர் க.மாரிமுத்து , ந .அய்யப்பன் , இலால்குடி அமுதன் ,முனைவர் லோகநாதன் , வழக்கறிஞர் க.செல்வராசு, உமா கோல்டு ஜெகன் சிவசக்தி D.கணேசன் , எஸ்.சுந்தர் , தமிழரசன், ஜே.பி அஜய் அருண் , வே.சரவணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தமிழ்நாட்டிற்கென்று தனிக்கொடி அமைக்க வேண்டும் , கல்வித்துறையில் தமிழ் கட்டாயப் பாடமாக்க வேண்டும் , தமிழ் நாட்டில் தாழர்களுக்கே வேலை வாய்ப்பில் முதலிடம் கொடுக்க வேண்டும் , போன்ற பன்னிரெண்டு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்வில் முன்னதாக எழுதமிழ் இயக்க செயலாளர் வீ.கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார்.

இனிய நந்தவனம் 24 ஆம் ஆண்டு விழா

  • Chandrasekar
  • 10/01/2021
  • ​ஆண்டு விழா

திருச்சியின் இலக்கிய அடையாமாக விளங்கி வரும் இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத சஞ்சிகையின் 24 ஆம் ஆண்டு விழா 10/01/2021 அன்று திருச்சி செவனா உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது விஜிபி நிறுவன திருச்சிக்கினைத் தலைவர் இரா. தங்கையா தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு திருச்சி லிம்ரா பேக்ஸ் நிறுவனர் எம்.சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார். மணப்பாறை லட்சுமி மெட்ரிக் பள்ளித் தாளாலார் அரிமா சௌமா ராஜரத்தினம் , ரொட்டேரியன் வி.எஸ். . பாஸ்கரன் , கவிஞர் முருகபாரதி , கவிஞர் கவி செல்வா , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் திருச்சி பாட்சா பிரியாணி நிறுவனர் முகம்மது அபூபக்கர் சித்தீக் , புலவர் தியாகசாந்தன் கனடாவிலிருந்து Dr . நரேந்திரா விவேகானந்தா , ஜெர்மனியிலிருந்து நையினைவிஜயன், இலங்கையிலிருந்து கவிஞர் சுபாஷனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் இனிய நந்தவனம் நடத்திய சிறந்த சுய முன்னேற்ற நூல் பரிசுப் போட்டியில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணனுக்கு முதல் பரிசும் கவிஞர் மு.முருகேசுக்கு இரண்டாம் பரிசும் மயிலாடுதுறை இளைய பாரதிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது மூவருக்கும் நம்பிக்கை நாயகர் என்ற விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் எழுதிய "மசிழ்ச்சி" சிறுகதை நூலும் இனிய நந்தவனம் குழும வெளியீடான "தூண்டில் " ஹைக்கூ இதழும் வெளியிடப்பட்டது விழாவின் முத்தாய்ப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாதனை மாணவர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது தமிழகம் மட்டுமல்லாமல் கனடா , ஜெர்மனி ,சுவிட்சகர்லாந்து , இலண்டன் , இலங்கை, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் விருது பெற்றனர் முன்னதாக இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க கவிஞர் பா.தென்றல் கவிஞர் மணிகண்டர் இருவரும் நிகழ்வை ஆழகாக தொகுத்து வழங்க முனைவர் வே.த.யோகநாதன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் நிகழ்வில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பெங்களூரில் இலக்கியக் கருத்தரங்கம்

  • Chandrasekar
  • 15/12/2020
  • ​இலக்கியக் கருத்தரங்கம்

தமிழ்நாடு திருச்சியிலிருந்து 23 ஆண்டுகளாக வெளிவரும் இனிய நந்தவனம் ஏற்பாட்டில் பெங்களூர் தரலாபாலு கேந்திரா நூலக வளாகத்தில் தற்கால தமிழ் மற்றும் கன்னட கவிதைகளின் போக்குகள் குறித்து கருத்தரங்கம் 25/12/2019 அன்று சிறப்பாக நடைபெற்றது கன்னட எழுத்தாளார் விஜய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்க கருத்தரங்கில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , கவிஞர் சொர்ணபாரதி , கவிஞர் பா.தென்றல் ,முனைவர் இளவரசி ,முனைவர் வே.த.யோகநாதன் , கவிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தற்கால கவிதைகள் குறித்து உரையாற்றினர் " தற்கால கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிக வேகமாக நடந்து வருகிறது . மொழிகள் கடந்து கவிதைகள் மீதான ஈர்ப்பும் பலம் பெற்று வருகிது .அதே நேரத்தில் திராவிட மொழிகளில் சமஸ்கிருத கலப்பும் தவிர்க முடியாமல் ஊடுருவலாக இருக்கிறது என்று விஜய்சங்கர் தலைமையுரையில் குறிப்பிட்டார் கன்னடத்தில் சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிைஞர்களை அடையாளம் கண்டு விருதுகள் வழங்கி சிறப்பிக் கப்பட்டது பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியர் மலர் விழி நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்க கன்னட எடுத்தாளர் இந்திரா தொகுத்து வளங்கினார்

இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் வெளியீட்டு விழா

  • Chandrasekar
  • 15/12/2020
  • சிறப்பிதழ் வெளியீட்டு விழா

கொரோனா நெருக்கடியில் பத்திரிகையை தயாரித்து வெளியிடுவதே மிகுந்த சிரமமாக இருக்கும் போது வெளியீட்டு விழா செய்வது அதைவிட சிரமமானது ஆனால் , சிரமத்தை பொருட்படுத்தாமல் இனிய நந்தவனத்துக்கு அங்கிகாரம் வழங்க வேண்டு என்பதற்காக சற்றும் நான் எதிர்பார்க்காத நேரத்தில் கனடாவில் விழித்தெழு பெண்ணே என்ற அமைப்பின் நிறுவனர் சசிகலா நரேந்திரா அவர்களின் முன்னெடுப்பில் நவம்பர் 01/11/2020 அன்று டொறெண்டோ சீரடி பாபா ஆலய அரங்கத்தில் இனிய நந்தவனம் கனடா சிறப்பிதழ் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது கனடா உதயன் வார இதழ் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவர் சதர்சன் , தொழிலதிபர் சங்கர் , கோதை அமுதன் மற்றும் பல இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் இணையம் வழியாக தனது வாழ்த்தினன தெரிவித்தார் இனிய நந்தவனத்திற்கு கனடாவில் நல்லதொரு அங்கிகாரம் வழங்கி வரும் உறவுகளுக்கும் வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த சசிக்கலா நரேன் அவர்களுக்கும் நரேந்திரா விவேகானந்தா அவர்களுக்கும் இனிய நந்தவனம் ஆசிரியர் குழு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிய நந்தவனம் பதிப்பகம் நூல் வெளியிடு

  • Chandrasekar
  • 15/12/2020
  • ​நூல் வெளியிடு

தமிழகத்தில் சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் திகழும் கவிஞர் பா.தென்றல் எழுதிய "நீசமாக எண்ணாதே நீச்சல் அடிக்கக் கற்றுக் கொள் " கட்டுரை நூல் வெளியிட்டு விழா தமிழ்நாடு காரைக்குடியில் சிறப்பாக வெளியிடப்பட்டது இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலை தமிழாசிரியர் கோ .ஆனந்தா தலைமையில் அரிமா எஸ்.சையது முன்னிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்து மேனாள் துணைவேந்தர் சொ.சுப்பையா வெளியிட கல்வியாளர் வி.செ.எமர்சன் ஜெல்சிங் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார் கல்வியாளரும் , கவிஞருமான தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்நூல் பெண்ணியம் பேசம் நூலாக எழுதப்பட்டுள்ளது . பெண்கள் அனைவரும் இந்நூலைப் படித்தால் வாழ்வில் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் எதிர்கொண்டு மீண்டு வர முடியும் என்று கவிஞர் தங்கம் மூர்த்தி தனது சிறப்புரையில் குறிப்பிட்டார் கவிஞர் தமிழ்மதி நாகராசன் , பேராசியர் அரச முருகபாண்டியன், முனைவர் இரா .வனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர் கவிஞர் பா.தென்றல் நூல் எழுதப்பட்ட அனுப்பவும் குறித்து ஏற்புரை வழங்கினார் முன்னதாக பா.சரவணன் அனைவரையும் வரவேற்க நந்தவனம்சந்திரசேகரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் செல்ல ச.ரிந்தியா நிகழ்வை நேர்த்தியாக தொகுத்து வழங்கி அழகுப்படுத்தினார்

இருப்பதில் பகிர்வோம்

  • Chandrasekar
  • 15/12/2020
  • பகிர்வோம்

நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே நந்தவனம் பவுண்டேசன் தொடங்கப்பட்டது . சிறிய அளவில் கல்வி உதவியும் திறமையான மகளிருக்கு சாதனைப் பெண் விருதும் . திறமையான மாணவர்களுக்கு சாதனை மாணவர் விருதும் வழங்கிவருகிறோம் பெரிய அளவில் நிதி ஆதாராம் இல்லை என்றாலும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே சிரமங்களைக் கடந்தும் தொடர்ந்து சேவையில் ஈடுபட வைக்கிறது நந்தவனம் பவுண்டேசனின் அடுத்த முயற்சியாய் இருப்பதில் பகிர்வோம் என்ற திட்டத்தின் மூலம் மாதந்தோறும் முப்பதாம் தேதி அன்று இரண்டு குடும்பத்திற்கு இருப்பதில் பகிர்ந்து கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் முயற்சியை கையில் எடுத்துள்ளோம் இம் முயற்சிக்கான நிதி ஆதாரத்தை எப்படி தேடுவது என்று யோசித்து நிற்கையில் அதற்கான நிதியை நான் தருகிறேன் என்று முன் வந்திருக்கிறார் கனடாவைச் சேர்ந்த சமூக சேவகர் Dr நரேந்திரா விவேகானந்தா அவர்கள் தனது வருமானத்திலிருந்து மாதந்தோறும் ஒரு பகுதியை இத்திட்டத்திற்காக வழங்க இருக்கிறார் நல்லது செய்யப் பணம் முக்கியமல்ல மனமே முக்கியம் என்பதற்கு இதுவே ஒரு சான்றாக எடுத்துக் கொள்ளலாம் இருப்பழில் பகிர்வோம் திட்டத்தின் முதல் பயனாளிகளாக இன்று (30/11/2020)திருச்சி அல்லித் துரையைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கார்த்திக் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களும் . மதுரையைச் சேர்ந்த கணவனை இழந்து இரண்டு மகன்கருடன் சிரமப்படும் இந்திரா குடும்பத்திற்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது வலது கைக் கொடுப்பது இடது கைக்கு தெரியாமால் இருந்து விட்டுப் போகலாமே பின்பு எதற்கு இப்படி ஒரு பதிவு என்று யாருக்கேனும் எண்ணம் எழலாம் ஆனால். இந்தப் பதிவு அவசியம் தேவையாய் இருக்கிறது ஏனென்றால் எங்களுக்கு நிதி தேவையாக இருக்கிறது நீதி மிகுந்தவர் யாருக்கேனும் எங்களோடு இணைந்து இருப்பதில் பகிர்ந்து கொடுக்க முன்வரலாம் ஆகையாலேயே எங்கள் சேவையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம் .நன்றி

சர்வதேச சாதனைப் பெண்களுக்கு நந்தவனம் பவுண்டேசன் விருது

  • Chandrasekar
  • 10/12/2020
  • ​உலக மகளிர் தினம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்மையைப் போற்றுவோம் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பல துறைகளில் சாதனை செய்து வரும் சாதனைப் பெண்களை தேர்வு செய்து நந்தவனம் பவுண்டேசன் "சாதனைப் பெண் " என்ற விருது வழங்கி கௌரவப்படுத்துகிறது திருச்சி லிம்ரா பேக்ஸ் அனுசரனையுடன் 8/03/2020 ஞாயிறு அன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. சர்வதேச அளவில் தேர்வு செய்யப்பட்ட 22 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. பவித்ரா நந்தகுமார் (ஆரணி) செல்வி காயத்ரி (மதுரை) அ.இளவரசி (சேலம்) சாரதாசந்தோஷ் (ஐதரபாத்) காயத்ரி பிரபு (பெங்களூர்) இந்திரா சரண் (பெங்களூர்) ஜீவராணி (இலங்கை) பாத்திமா ஸிமாரா அலி (இலங்கை) காயத்ரி ஜோசப் ஜான் (இலங்கை) புஷ்பராணி சத்யா (இலங்கை) பாத்திமா றிஸ்வானா (இலங்கை) விஜயகுலசேகரப்பிள்ளை (கனடா) ஜெயரம்யா ஜெயகாந்தன் (கனடா ) வாசுகி சித்திரசேனன் (ஆஸ்திரேலியா ) ரஜனி உதயசேகரன் (இலண்டன்) சிபோகி சிவகுமாரன் (ஜெர்மனி) கௌசல்யா (மலேசியா) புளோரன்ஸ் ஜான் (மலேசியா) எம் .எஸ் .ஸ்ரீ லெக்ஷ்மி (சிங்கப்பூர்) ஸ்ரீ ரோகிணி (துபாய்) ஸ்ரீதேவி (துபாய்) காஞ்சனா துரைசிங்கம் (கனடா) ஆகியோர் விருது பெற்றனர் திரைப்பட இயக்குநர் அகத்தியன், கனடா மிஸ் தமிழ் யுனிவர்ஸ் நிறுவனர் நரேந்திர விவேகானந்தா , இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் , சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர் விழாவில் பிரான்சிலிருந்து வருகை தந்த நாடக நடிகர் தயாநிதியின் "கண்டிகளா" நாடகமும் செல்வி ஏஞ்சலின் செரிலின் பாரம்பரிய நடனமும் கவிஞர் சொர்ணபாரதியின் வாழ்த்துக் கவிதையும் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது சர்வதேச சாதனைப் பெண்களை ஒரே மேடையின் கீழ் ஒருங்கிணைத்த நந்தவனம் பவுண்டேசன் நிறுவனர் நந்தவனம் சந்திரசேகரன், செயலாளர் எம் .சாதிக் பாட்சா , பொருளாளர் கவிஞர் பா.தென்றல் ஆகியோரை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டினர்

ஈழத்துப் படைப்பாளர் மது பாரதியின் சிறுகதை நூல்வெளியீடு

  • Chandrasekar
  • 09/12/2020
  • நூல்வெளியீடு

ஈழத்துப் படைப்பாளர் மதுபாரதியின் "என்னைச் சுற்றி ஒர் உலகம்" சிறுகதை நூல். இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண்கள் விருது வழங்கும் விழா மேடையில் இந்நூல் வெளியிடப்பட்டது திரைப்பட இயக்குநர் அகத்தியன் வெளியிட மலேசியா" நாளை நமதே "சஞ்சிகை ஆசிரியர் டத்தின் கோகிலவாணி முதல் பிரதியைப் பெற்றுத் கொண்டார் நூலாசிரியர் மது பாரதி அவரது கணவர் இளங்கோவன் நிதழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நந்தவனம் சந்திரசேகரன் கவிஞர் பாதென்றல் ஆகியோர் நிகழ்வை வழிடைத்தினர்

ஜெர்மனியில் இனிய நந்தவனத்திற்கு மதிப்பளிப்பு

  • Chandrasekar
  • 08/12/2020
  • ​மதிப்பளிப்பு

சர்வதேசத் தமிழர்களின் ஆதரவு பெற்ற இனிய நந்தவனம், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பிதழாக வெளியிட்டு வருகிறது. கனடா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை சிறப்பிதழ்களைத் தொடர்ந்து, பிப்ரவரி 2020 இதழ், ஜெர்மனி சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. இச்சிறப்பிதழின் வெளியீட்டு விழா 23.02.2020 அன்று ஜெர்மனியில் எசன் நகரில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது. ஜெர்மனி எசன் நுண்கலைக் கல்லூரி, அறநெறிப் பாடசாலை மற்றும் தமிழருவி சஞ்சிகையின் நிறுவனரான தமிழவேள் நயினை விஜயன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் பண்ணாகம்.காம் ஆசிரியர், ஊடகவித்தகர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ஏற்று, முதல் பிரதியை வெளியிட, கம் காமாட்சி அம்பாள் ஆலய அறங்காவலர் சிவசிறி பாஸ்கரக் குருக்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். பிரான்சிலிருந்து வருகை தந்த சர்வதேசத் தமிழ் வானொலியின் நிறுவனரும், உலகப் பண்பாட்டு இயக்க ஐரோப்பியத் தலைவருமான திரு செல்வராசா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் விழாவில் எழுத்தாளர் ஏலையா முருகதாஸ், அகரம் சஞ்சிகை ஆசிரியர் இரவீந்திரன், எழுத்தாளர் இந்து ‘வெற்றிமணி’ சஞ்சிகை ஆசிரியர் சிவகுமாரன், மண் சஞ்சிகை ஆசிரியர் சிவராசன், குறும்பட இயக்குனர் சிபோ சிவக்குமாரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். ஜெர்மனி எசன் நகரில் இயங்கி வரும் சலங்கை ஒலி நாட்டிய கலா மன்ற நடன ஆசிரியை சாவித்திரி சரவணன் நடத்திவரும், நடனப் பள்ளி மாணவிகள் பரதநாட்டியத்தில் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். வீணை இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் இறுதியாக இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்புரை வழங்கி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். எழுத்தாளர் பாலா நிகழ்வை அழகாகத் தொகுத்து, ஒழுங்குபடுத்தினார். ஜேர்மனி வாழ் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இனிய நந்தவனம் இலக்கியத் திருவிழா

  • Chandrasekar
  • 07/12/2020
  • இலக்கியத் திருவிழா

இனிய நந்தவனம் 23 ஆம் ஆண்டு விழா சாதனை மாணவர்கள் விருது வழங்கும் விழா நூல் வெளியிட்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சியில் ஜனவரி 5 அன்று சிறப்பாக நடைபெற்றது வி. ஜி.பி நிறுவனம் துணைத் தலைவர் இரா .தங்கையா தலைமையில் .லிம்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் எம்.சாதிக் பாட்சா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இயக்குநர் மு.களக்கியம் , கவிஞர் சக்திஜோதி, இலங்கை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் கனடா குமார் தம்பியப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாககக் கலந்து கொண்டனர் .ஆபுபக்கர் சித்திக் . விஜய் வீத்தாராமன் , கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தமிழகம் மற்றும் இல்லங்கை ,கனடாவைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு சாதனை மாணவர் விருதுகள் வழங்கப்பட்து கரூர் சுமதி குழும உரிமையாளர் ரத்தினம் அவர்களின் உழைப்ப்பைப் பாராட்டி உழைப்புக்செம்மல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஐந்து பேருக்கும் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது இயக்குனர் மு.களக்சியத்திற்கு "தமிழ்மறவன்" விருதும் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமருக்கு "மொழிக் காவலர்" விருதும் கவிஞர் சக்திஜோதி க்கு "பெருங்கோப் பெண்டு " விருதும் கனடா சமூக செயற்பாட்டாளர் குமார் தம்பியப்பாவுக்கு "சேவைச் செம்மல் "விருதும் யாழ்ப்பாணம் பள்ளி ஆசிரியர் வளரினா இளங்கோவனுக்கு "கல்விச் செம்மல் "விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது "செம்மொழியான தமிழின் அருமை அன்னியருக்குத் தெரிகிறது .ஆனால் நமக்குத் தான் அதன் அருமையும் பெருமையும் தெரிவதில்லை . பெற்றோர்கள் விரும்புவதில்லை எந்த மொழியையும் கற்கலாம் எத்தனை மொழியிலும் பேசலாம் அது முக்கியமல்ல ஆனால தமிழை விட சிறந்த மொழி உலகில் இல்லை என்ற உண்மையை குழந்தைகளுக்குப் புகட்டுங்கள் .அவர்களுக்கு நமது தாய் மொழியின் பெருமையை உணரச் செய்யுங்ள ". என்று இயக்குநர் மு.களஞ்சியம் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார் இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் எழுதிய கூர்காவின் விசில் சத்தம் கவிதை நூலும் நான் கண்ட இந்தோநேசியா பயணக் கட்டுரை நூலும் கவிஞர் பா.தென்றலின் உயிர் பருகும் மழை கவிதை நூலும் வெளியிடப்பட்டது நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முன்னதாக நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க கவிஞர் பா.தென்றல் நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கினார்.

மூன்று சகோதரிகள் நூல்கள் வெளியிட்டு விழா

  • Chandrasekar
  • 06/12/2020
  • நூல்கள் வெளியிட்டு விழா

தமிழ்ப் பதிப்பக வரலாற்றில் சாதனை நிகழ்வாக ஒரே மேடையில் மூன்று சகோதரிகளின் நூல்கள் இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது. காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஜீ.சுவேதா, பா.தென்றல், பா.லட்சுமி மூவரும் உடன் பிறந்த சகோதரிகள். கலை இலக்கியத் தளத்திலும் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் மூவரும் முதல் முறையாக எழுதிய இலக்கிய "ஆளுமையில் சொல்வேந்தர்" (ஜீ.சுவேதா), "உயிர் பருகும் மழை" (பா.தென்றல்), "மழையில் நனையும் வெயில்" ( பா.லெட்சுமி) ஆகிய மூன்று நூல்களையும் இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா 23.11.2019 அன்று காரைக்குடி ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேராசியர் நா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ கார்த்திகேயன் பள்ளி மேனாள் செயலர் வே.பாலசுப்பிரமணின், அவரது துணைவியார் கோ.ஆனந்தா ஆகியோர் முன்னிலை வகிக்க, இந்து தமிழ் முதுநிலை உதவி ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்ப் பதிப்பக வரலாற்றில் இது ஒரு சாதனை நிகழ்வுதான். மூன்று சகோதரிகளின் நூல்களை ஒரே மேடையில் வெளியிட்டது இதுவே முதல் முறை. மூன்று நூல்களுமே மிகச் சிறப்பான கருத்தாழமிக்க படைப்புச் செறிவுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இப்படியான புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து அறிமுகப்படுத்தி வரும் இனிய நந்தவனம் பதிப்பகத்தாரை மனம் திறந்து பாராட்டுகிறேன் என்று மு.முருகேஷ் தனது சிறப்புரையில் குறிப்பிட்டார். நலந்தா புத்தகக்கடை உரிமையாளர் செம்புலிங்கம் வாழ்த்துரை வழங்க, முனைவர் க.சுமதி, முனைவர் இரா.வனிதா, எழுத்தாளர் ம.ஜெயமேரி ஆகியோர் நூல்கள் குறித்து ஆய்வுரை வழங்கினர் . முனைவர் ரெ.சந்திரமோகன், தமுஎகச மாவட்டத் தலைவர் ஜீவசிந்தன், ஆசிரியர் பா.சரவணன் மூவரும் முதல் பிரதிகள் பெற்றுக் கொண்ட னர். முன்னதாக ஆசிரியர் பா.முத்து வள்ளி அனைவரையும் வரவேற்க, நூலாசிரியர்கள் மூவரும் ஏற்புரையாக தங்கள் இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக ஆசிரியர் பா.சரஸ்வதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் . நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்வைத் தொகுத்து வழங்கிச் சிறப்பாக வழிநடத்தினார்.

இனிய நந்தவனம் இலக்கியப் பணிக்கு புதுக்கோட்டை கம்பன் கழகம் பாராட்டு

  • Chandrasekar
  • 05/12/2020
  • பாராட்டு விழா

இதழியல் தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் இதழாசிரியர்களைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்கோட்டை கம்பன் கழகம் 43 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவில் 23/7 /2018 அன்று ஒன்பது இதழாசிரியர்களை அழைத்து பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர் இவ்விழாவில் இனிய நந்தவனத்தின் இலக்கிய சேவையைப் பாராட்டி ஆசிரியர் த.சந்திரசேகரன் கௌரவிக்கப்பட்டார் இந்தோனேகியத் தமிழ்க் கலாச்சாரப் பேரவைத் தலைவர் விசாகன் மயிலாசலம் தலைமையில் ஞானாலயா பி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் இதழாசிரியர்களுக்கு பாராட்டுக் கேடயம் லழங்கப்பட்டது "புதுகைத் தென்றல்" மு.தர்மராசன் , "கவிதை உற்வு" ஏர்வாடி இராதாகிருஷ்ணன் , "கிழக்கு வாசல் " உத்தம சோழன் , "சங்க இலக்கிய பொதுமர் " ச.தமிழரசு , "மேன்மை " மு .மணி , "ஏழைதாசன்" எஸ்.விஜயகுமார் , "மகாகவி " வதிலை பிரபா , "உயிர் எழுத்து " சுதிர் செந்தில் ஆகியோர் பாராட்டப்பட்டனர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஒவ்வொரு இதழாசிரியர்கள் பற்றியும் அவர்களின் தமிழ்ப்பணி பற்றியும் விளக்கவுரையாற்றி சிறப்பித்தார் அகில இந்திய வானொலி இயக்குநர் க.நடராசன் இதழாசிரியர்களுக்கு பாராட்டுரை நிகழ்த்தினார் இவர் பேசும் போது இது போன்ற இலக்கிய இதழ்கள் தான் மொழிக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்கிறார்கள் . ஒரு இதழைத் தொடர்ந்து நடத்துவதிலும் அதை வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதிலும் எத்தகைய சிரமங்கள் இருந்தாலும் அவற்ரை எல்லாம் பொறுத்துக் கொண்டு தமிமொழியை வளர்க்க வேண்டும் என்று முயன்று வருகிறார்கள் .இவர்கள் செய்து வரும் இதழியல் பணிக்கு நம்மால் முடிந்த அளவு ஆதரவும் உதவியும் செய்ய வேண்டு என்று குறிப்பிட்டார் தமிழ் வளர்ச் இத்துறை துணை இயக்குநர் க.சிவசாமி த.மு.எ.க.சங்கம் மாவட்டத் தலைவர் ரமா. ராமநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர் முன்னதாக விமாக்குழு உறுப்பினர் ஆர்.எஸ் .காசிநாதன் அனைவரையும் வரவேற்க என்.கணேஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் கம்பன் கழக செயலாளர் ரா.சம்பத் குமார் விழாவை சிறப்பாக ஒழுங்கிணைத்து வழி நடத்தினார்.

புதிய பாதையில் இலக்கியம் வளர்க்கும் இனிய நந்தவனம்

  • Chandrasekar
  • 04/12/2020
  • இலக்கியம்

அனைத்து முன்னேற்றமும் செயல்பாட்டினைப் பொருத்தே அமைகிறது என்பார் அமெரிக்க அதிபர் கால்வின் கூலிட்ஜ் .இனிய நந்தவனத்தின் இடைவிடாத செயல்பாடே வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது . மாதந்தோறும் ஒரு சிறப்பிதழ் என்ற வரிசையில் ஜுலை மாத இதழ் தொழில் நகரமான ஒசூர் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது இதன் வெளியீட்டு விழா 15/07/2018 அன்று ஓசூரில் சப்தகிரி மேல்நிநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது முனைவர் வணங்காமுடி தலைமையில் பாவலர் கருமலைத் தமிழாமன் முன்னிலையில் ஓசூர் சிறப்பிதழ் வெளியிட பெங்களூர் தொழிலதிபர் திருமணி பெற்றுக் கொண்டார் அறம் கிருஷ்ணன் . சுகன்யா ஜனகர் , சாந்தி நாராயணன் , கலாநிதி வே.த.யோகநாதன் .எழுத்தாளர் பெரியசாமி ,கவிஞர் மணிமேகலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் கவிஞர் பா . தென்றல் நந்தவனத்தில் தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார் இனிய நந்தவனம் கையெழுத்துப் பிரதியாக தொடங்கப்பட்டு இன்று அச்சிதழாக உலகத் தமிழர்களின் கைகளில் தவழ்கிறது. இனிய நந்தவனத்தின் தனிச்சிறப்பே ஒவ்வொரு மாதமும் சிறப்பிதழாக வெளியிடுவதே சிறப்பிதழ் என்றால் புதுசு கண்ணா புதுசு என்று சமையல் குறிப்பை வெளியிடாமல் புதிய தகவல்களையும், புதிய மனிதர்களையும் , சாதனையாளர்களையும் அடையாளம் காட்டி புதிய பாதையில் இலக்கியம் வளர்க்கிறது. இதை எடுத்தோம் படித்தோம் வைத்தோம் என்றில்லாமல் பொக்கிசம் போல பாதுகாக்க வேண்டிய இதழ் எந்த வயதினரும் படிக்கும் வகையில் இதழைத் தயாரிப்பது இதன் தனிச்சிறப்பு என்று பா.தென்றல் ஆய்வுரையில் குறிப்பிட்டார் முன்னதாக செம்பரிதி சுரேஷ் அனைவரையும் வரவேற்க நந்தவனம் சந்திரசேகரன் ஏற்புரை வழங்கி சிறப்பித்தார் ஓசூர் தென்றல் வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட இவ் விழாவை சிறப்பாக வழிநடத்தி அனைவருக்கும் சாய் ரமணா நன்றி தெரிவித்தார் அன்று மாலை ஓசூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவிலும் இனிய நந்தவனம் அறிமுகம் செய்யப்பட்டது.

கனடிய தமிழ்ப் பத்திரிகையாளர் ஆர்.என்.லோகேந்திரலிங்கத்தின் தமிழ்ப்பணிக்குப் பாராட்டு

  • Chandrasekar
  • 03/12/2020
  • பாராட்டு விழா

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்ப்பணியாற்றும் ஈழத் தமிழர்களில் மிக முக்கியமானவர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்கள். அண்மையில் இவரது தமிழக வருகையை முன்னிட்டு தமிழ்ப்பபணிக்கான பாராட்டு விழாவும். தமிழக எழுத்தாளர்களுடன் கலந்துரை யாடலும் நடைபெற்றது .28/07/2018 அன்று சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மேன்மை சஞ்சிகை ஆசிரியர் மூ.மணி தலைமையேற்க நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார் கவிஞர் பா . தென்றல் , கவிஞர் தாமரைப் பூவண்ணன் , மருத்துவ கலாநிதி வே.த.யோகநாதன் எழுத்தாளர் வித்யா , வ.மு.சே .திருவள்ளுவர் , ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் ஆர்.என் .லோகேந்திரலிங்கம் ஏற்புரையாற்றினார் இவர் பேசும் போது இது போன்ற இலக்கிய சந்திப்பு எனக்கு உட்சாகத்தை தாக்கிறது . கனடாவில் எங்களது பணிகளுக்காக நாங்கள் ஓடிக்கொண்டே இருக்க்க வேண்டும் அதனால் கொஞ்சம் களைப்பும் வரும் உங்களை சந்திப்பதன் மூலமாகவும் கலந்துரையாடுவதன் மூலமாகவும் அந்தக் களைப்பு காணாமல் போய்விடுகிறது .குறிப்பாக இலக்கியவாதிகளோடு கலைந்துரையாடுவது புதிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது தேங்கி விடாமல் தொடர்ந்து பயணிக்க இது உந்து சக்தியைத் தருகிறது இப்படி ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த நந்தவனம் சந்திரசேகரனுக்கும் கலந்து கொண்ட உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் முன்னதாக கவிஞர் மணி எழிலன் அனைவரையும் வரவேற்க ஆர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார் .திருச்சி விம்ரா பேக்ஸ் நிறுவனர் சாதிக் பாட்சா நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார் மேலும் கவிஞர் நாகராசன் கவிஞர் திலகவதி .பத்திரிகையாளர் மோ பாட்டழகன் . செளந்ததர்ராஜன் . பிரகாஷ் , தொழிலதிபர் சிவக்குமார், கவிஞர் பாரதி பத்மாவதி ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

அந்தமானில் இலக்கிய சந்திப்பு

  • Chandrasekar
  • 02/12/2020
  • இலக்கியம்

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் இனிய நந்தவனம் மாத சஞ்சிகை இணைந்து நடத்திய இலக்கிய சந்திப்பு 4 / 8/2018 அன்று அந்தமான் தமிழர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது .அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் கிருஸ்ணமூர்த்தி தலைமையேற்க உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் த.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் விழாவில் தமிழக எழுத்தாளர்கள் வணங்காமுடி ,சுப்புராஜுலு , துரைராஜ் , அரிமா தேசி , குறள் முரசுகுப்பன் , மேன்மை மணி , முகம்மது அலி ,வெங்கடேசன் அந்தமான் தமிழ் எழுத்தாளர்கள் சேது கபிலன் , செண்பகராஜன் , அன்புஅழகர்சாமி , கனகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிட கவிஞர்கள் மணிமேகலை , பாரதி பத்மாவதி இருவரும் கவிதை பாடி சிறப்பித்தனர். விழாவில் த.சிவசுப்பிரமணியன் எழுதிய சிந்தனை சிதறல்கள் நூல் வெளியிடப்பட்டது.லிம்ரா பேக்ஸ் நிறுவனர் சாதிக் பாட்சா அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார முன்னதாக ஜெயராமன் அனைவரையும் வரவேற்க அப்துல் ரகுமான் நன்றி தெரிவித்தார் நந்தவனம் சந்திரசேகரன் நிகழ்வை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார் இது போன் இலக்கிய சந்திப்புகளை மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஏற்பாடு செய்ய வேண்டுமென அந்தமான் தமிழ் எழுத்தாளர்கள் கேட்டுக் கொள்ள செய்யலாம் என நிகழ்வில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

வரலாற்றில் தடம் பதித்த சர்வதேச மகளிர் தினக் கொண்டாடம்

  • Chandrasekar
  • 01/12/2020
  • மகளிர் தினக் கொண்டாடம்

பெண்மையைப் போற்ற வேண்டும் ,சாதிக்கும் பெண்களைக் கெளரவப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டு உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது , சர்வதேச அளவில் பல துறைகளில் சாதித்து வரும் பெண்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விருதுகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்ற முயற்சியாக தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து இயங்கி வரும் நந்தவனம் பவுண்டேசனும் , லிம்ரா பேக்ஸ் நிறுவனமும் இனைந்து மார்ச் 10/03/2019 அன்று சென்னையில் உலக மகளிர் தின விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடியது இந்நிகழ்வில் தமிழகம் மட்டுமல்லாமல் சுவிட்சர்லாந்த் , கனடா, மலேசியா , துபாய் , இலங்கை போன்ற நாடுகளில் சாதிக்கும் தமிழ்ப் பெண்கள் இருபது பேரை அடையாளம் கண்டு விருதுகள் வழங்கப்பட்டது சுவிச்சர்லாந்திலிகுந்து பத்மஜன தேவி, பாமினி சத்தியமூர்த்தி , கனடாவிலிருந்து சசிகலா நரேன் , மணிமேகலைை கைலைவாசன் மலேசியாவிலிருந்து பொன் கோகிலம் பொன்னுசாமி , மேகஸ்வரி சுப்பிரமணியம் ,டத்தின் ஜெயேகாகிலம் ,க்ளோரி மார்த்தாண்டன்.துபாயிலிருந்து வித்யா ஸ்ரீதர் , ஜெஸி விக்டர் .இலங்கையிலிருந்து கலாசூரி திவ்யா சுஜன் ,சுபாஷினி பிரணவன் ,வலரீனா இளங்கோவன் , சுகன்யா அரவிந்தன்.தமிழகத்தில் சித்ரா அரவிந்தன் ,முனைவர் மலர்விழி, பிரியதர்ஷினி மாரிமுத்து , மருத்துவர் சாமுண்டி சங்கர் , ஆஷா பரேக் நந்தினி , இரா .மேகலா , எம்.சாந்தி ஆகியோரின் தமிழ்ப்பணி மற்றும் சமுகப்பணியைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது நந்தவனம் பவுண்டேசன் நிறுவனர் நந்தவனம் சந்திரசேகரன் தலைமையில் லிம்ரா பேக்ஸ் நிறுவனர் சாதிக் பாட்சா முன் நிலையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நக்கீரன் கோபால் , கவிஞர் விவேகா , இசையமைப்பாளர் எஸ் .எஸ் .குமரன் , டாக்டர் வி .ஜி .சந்தோசம் , மேனாள் அமைச்சர் புலவர் இந்திரகுமாரி , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர் நக்கீரன் கோபால் தனது வாழ்த்துரையில் முதல்முறையாக சர்வதேச மகளிர் தினத்தை சர்வதேச அளவில் சாதிக்கும் பெண்களை அடையாளம் கண்டு அழைத்து வந்து விருதுகள் வழங்கி சிறப்புச் செய்வது பாராட்டகூடியது .இது சாதாரண விசயமல்ல அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கொண்டு வந்து இப்படி ஒரு விழா எடுப்பதை பாராட்டுவதோடு நந்தவனம் பவுண்டேசன் குழுவினரை பெருமையுடன் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார் சாதனைப் பெண்களை வாழ்த்தும் விதமாக கவிஞர் பா.தென்றல் வாழ்த்துக் கவிதை வாசிக்க .நடனப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்கி நடைபெற்றது குறிப்பாக இலங்கையிலிருந்து வருகை தந்த ரேஷ்மாரமேஷ்குமார் .ரோபிணி அருட்செல்வம் ஆகியோரின் நாட்டிய நாடகம் அனைவரையும் ஈர்த்தது நந்தவனம் பவுண்டேசன் செயலாளரும் மேம் கிரியேசன் நிறுவனருமான கவிஞர் மணி எழிலன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழிநடத்த திருமதி ஆர்த்தி அனைவரையும் மகிழ்வித்து நிகழ்ச்சியைதொகுத்து வழங்கினார் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அனைவர் மனதிலும் தடம் பதிக்கும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தொழிலதிபர் சாதிக் பாட்சாவுக்கு கனடா உதயன் விருது

  • Chandrasekar
  • 30/11/2020
  • உதயன் விருது

கனடாவில் முதன்மையான தமிழ் வார இதழாக வெளிவரும் உதயன் வார இதழ்னூடாக ஒவ்வொரு ஆண்டும் பல் துறைகளில் சாதித்தவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறார்கள் உதயன் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் தலைமையில் ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படும் இவ்விருது வழங்கும் விழாவில் 2019 க்கான விருது பெறுவோரில் தமிழகத்தொழிலத் பதிரான திருச்சி லிம்ரா பேக்ஸ் பிரவேட் லிமிடெட் நிறுவனர் சாதிக் பாட்சா அவர்களுக்கு மே 05/05/2019 அன்று கனடா ஸ்கோபுறோ நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த தொழிலதிபருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது மேலும் இவ் விழாவில் தமிழகத்தில் திருச்சியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரனின் இதழியல் பணியைப் பாராட்டி கனடா ஸ்கோபுறோ நகர பாராளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree அவர்களின் கையொப்பமிட்ட நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ஏற்பாட்டில் எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு நிகழ்விலும் நந்தவனம் சந்திரசேகரன் சாதிக் பாட்சா ஜெர்மன் மண் சஞ்சிகை ஆகியர் வைமுத்துசிவராஜா ஆகியோர் கெளரவிக்கப்பட் டுள்ளார்.

மலேசியப் பேராளர்களுக்குப் பாராட்டு விழா

  • Chandrasekar
  • 17/12/2017
  • பாராட்டு விழா

நந்தவனம் பவுண்டேசன் லிம்ரா பேக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மலேசியப் பேராளர்களுக்கான பாராட்டு விழா 17/12/2017 அன்று திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது.மலேசிய எழுத்தாளர் குணநாதன் தலைமையில் தமிழகம் வந்த மு.மனோகரன் .மு .உஷா , ம .லிங்கேஸ் , ம.லிங்கேஸ்னி , ம .யசிவன் ஆகியோருக்கு பாராட்டும் விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது விழாவுக்கு முன்னதாக நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க . எழுதமிழ் இயக்கத் தலைவர் குமரசாமி , ஸ்ரீ ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்க . தமிழக முன்னாள் அமைச்சர் என்.நல்லுச்சாமி மற்றும் குணநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் . விழாவின் முத்தாய்ப்பாக மலேசிய கோல சிலாங்கூர் மாவட்டத் தமிழ்க் கலை பண்பாட்டு இலக்கிய கழகம் சார்பில் திருச்சி பாட்சா பிரியாணி சென்டர் உரிமையாளர் ஏ.ஆர் .முகம்மது அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கு இலக்கியக் காவலர் என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார் .லிம்ரா பேக்ஸ் நிறுவன உரிமையாளர் சாதிக் பாஷா மலேசியப் பேராளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார் கவிஞர் பா.தென்றல் நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்க கோவிந்தம்மாள் தமிழ் மன்றத் தலைவர் ப.நாகராசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ​இலக்கிய சந்திப்பு

  • Chandrasekar
  • 24/05/2016
  • ​இலக்கிய சந்திப்பு

சிங்கப்பூர் தமிழர் இயக்கமும் இனிய நந்தவனம் பதிப்பகமும் இணைந்து நடத்தியஇலக்கிய சந்திப்பு 24-05-2016 அன்று சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூர் தமிழர் இயக்க தலைவர் ரெ.செல்வாராசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நந்தவனம் சந்திரசேகரன் தலைமை ஏற்றார் தமிழர் இயக்க ஆலோசகர் வே.தவமணி,தமிழாசிரியர் ஜாகூர் ஊசேன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் மேலும் இவ்விழாவில் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திராலிங்கம் அவர்களின் இதுவரை என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது ​.

​பன்னாட்டு கருத்தரங்கம்

  • Chandrasekar
  • 21/05/2016
  • பன்னாட்டு கருத்தரங்கம்

இனிய நந்தவனம் பதிப்பகமும் மலேசியா ஸ்ரீ முகவரி ஆரவாரியமும் இணைந்து நடத்திய புலம்பெயர்ந்த தமிழர்களின் தற்கால தமிழ் இலக்கிய போக்கு பன்னாட்டு கருத்தரங்கம் 21-05-2016 அன்று மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது. கனடா உதயன் வார இதழ் பிரதம ஆசிரியர் லோகேந்திராலிங்கம் தலைமை ஏற்க மலேசிய எழுத்தாளர் சங்கதலைவர் மன்னர்மன்னன் முன்னிலை​ வகித்தார். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, மலேசியா மற்றும் இலங்கையை சேர்ந்த முப்பத்தி மூன்று சாதனையாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது,மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவிதமிழ்வானன் அவர்களுக்கு உலகத்தமிழ்பதிப்பாளர் என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் நந்தவனம்சந்திரசேகரன் வரவேற்க கவிஞர் ரூபன் நன்றி கூறினார். இனிய நந்தவனம் மலேசியா ஆலோசகர் செல்லத் துரை ஆறுமுகம், ஆ. மைக்கல்பீம்ன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

இனிய நந்தவனம் இதழ் பணிக்கு இரண்டு விருதுகள்

எனது பத்தொன்பது ஆண்டு கால இனிய நந்தவனம் இதழ் பணியினை பாராட்டி இலங்கையில் இரண்டு விருதுகள் வழங்கி சிறப்பு செய்ததை பெருமையுடன் பகிர்கிறேன். இலங்கை கலை இலக்கிய ஊடக நண்பர்களால் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த இலக்கிய விழாவில் பேராசிரியர் சபா ஜெயராஜா தலைமையில் எழுத்தாளர் தாம்புசிவ, பத்திரிக்கையாளர் பொன்னுதுறை ஆகியோர் முன்னிலையில் இனிய தமிழ்ச்செம்மல் விருதும் தடாகம் கலை இலக்கிய வட்டம் கல்வி, கலை, கலாச்சார பண்பாட்டு அமைப்பினால் இலங்கை ஒட்டாமா வடியில் நடந்த இலக்கிய விழாவில் கலைமகள் ஹிதாயினி தலைமையில் இலங்கை கைத்தொழில் மற்றும் வணிகத்துறை மத்திய அமைச்சர் ரியாசாத் பதி யூதீன் மற்றும் கிராமிய மேம்பாட்டுக்கலை அமைச்சர் அமீர் அலீ ஆகியோர் முன்னிலையில் தமிழ்மணி என்ற விருது வழங்கி சிறப்பித்தனர்.

Literary Meeting in Malaysia Organized by
Iniya Nandavanam

  • Chandrasekar
  • 13/09/2015
  • Literary Meeting

இனிய நந்தவனம் பதிப்பகம் மூலமாக பல நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை ஒன்றிணைத்து இலக்கிய சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டோம். கடந்த மூன்று மாதமாக இதற்கான ஏற்பாடுகளைச் செய்து, திட்டமிட்டப் படி 13.09.2015 அன்று ‘ மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்க மண்டபத்தில் ’ மிகச்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தினோம். இந்த இலக்கியச் சந்திப்பை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டவுடன் முதலில் நந்தவனம் மலேசியாவுக்கான ஆலோசகர் செல்லதுரை ஆறுமுகம் அவர்களிடம்தான் முதல் ஆலோசனையை கேட்டோம். உடனே அவர் மிகப் பிரமாதமாக செய்து விடுவோம், நந்தவனம் நம் சொந்தவனம் ஆயிற்றே! என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நான் செய்கிறேன் என முன்வந்தார். அடுத்ததாக கவிஞர் த.ரூபனும், டெங்கில் கந்தசாமி முனியாண்டியும், அய்யா நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள், மற்றதை எல்லாம் செல்லத்துரை அய்யாவுடன் இணைந்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் மலேசியாவில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மட்டும் போதும் என்று கூறியதோடு, இந்த நிகழ்விற்கு பொருளுதவியும் செய்து நிகழ்வை திறம்பட நடத்திக் கொடுத்தார்கள். முதலில் இந்த மூவருக்கும் நந்தவனம் ஆசிரியர் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.